சி.சிதம்பரநாதக் குருக்கள். சாவகச்சேரி: திருக்கணித நிலையம், திருக்கணித பதிப்பகம், டச் வீதி, மட்டுவில், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்).
xx, 120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ.
யாழ்ப்பாணம்- மட்டுவில் திருக்கணித நிலைய ஸ்தாபகரும் திருக்கணித பஞ்சாங்க முன்னோடிகளின் வழித்தோன்றலுமான சிவஸ்ரீ சி.சிதம்பரநாதக் குருக்கள் திருக்கணித மார்க்கத்தை மக்களிடையே எடுத்துச்சென்று அதன் பிரயோகத்தை பிரசித்தமாக்கியவர். சோதிட மலர் என்ற சஞ்சிகை மூலம் சோதிடம் இந்துக்களின் கலைப்பொக்கிஷங்களுள் ஒன்று மட்டுமல்ல அது வாழ்க்கைக்கும் வழிகாட்டுவது என்பதை போதித்தவர். இவரது முன்னைய நூலான சோதிடம் கற்போம் என்ற நூலையடுத்து இந்நூல் திருமணப் பொருத்தம் தொடர்பான பல விடயங்களுடன் திருமணப் பொருத்தங்கள், ஏன் பொருத்தம் பார்க்கவேண்டும், திருமண வாழ்க்கை, விஷகன்யா தோஷம், செவ்வாய் தோஷம், சூரியன்-செவ்வாய் சேர்க்கை, மூல நட்சத்திர தோஷம், விவாகப் பொருத்தத்தில் வியாழன், சனீஸ்வரன், திருமணத்துக்கான பொது நிலைகள், நட்சத்திரரீதியில் பெண்களின் பிறப்புப் பலன், ஜாதகங்களின் தன்மைகள், நவாம்சமும் கிருமணமும் எனப் பல்வேறு விடயங்களை இந்நூல் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 224374).