8293 திருமண முறிவுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்.

தங்கராசா சிவபாலு. கனடா: த.சிவபாலு, 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R.ஆப்செட்).

xviii, 230 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

மண முறிவு ஏன்? திருமணத்திற்கு முன் கவனிக்கவேண்டியவை என்ன? பிரிந்துவாழும் பெற்றோரும் பிள்ளைகளும், குறைபாடுடைய பிள்ளைகள் பெற்றோரின் மண முறிவுக்குக் காரணமாகின்றனரா? தனித்தாய்மாரும் (Single Mother) பிள்ளைகளும், பெற்றோர் பிரிந்து வாழ்வதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் உள-உடலியற் பாதிப்புகள், குடும்பப் பிணைப்பில் உணவு, ஆண்களும் மணமுறிவும் பிரிந்திருத்தலும், பிள்ளைகள், மனைவிக்காக உதவிப் பணம்,  தனிப்பெற்றோரும் பிள்ளைகளும், தனிமையாகிவிட்ட பெற்றோரின் வெற்றிநடை, மணமுறிவடைந்து பிரிந்து வாழும் பெற்றோரின் பிள்ளைகள் மீதான பாட்டன் பாட்டிக்கான உரிமை, சக்களத்திச் சண்டையும் குடும்பப் பிரிவினையும், ஓரினச்சேர்க்கை சட்டமாக்கப்படுவதால் ஆண்-பெண் திருமண உறவை அது பாதிக்குமா? பலதார மணமும் மணமுறிவும்,  இரண்டாம் தார மணமும் மணமுறிவுகளும், சிறுவிடயங்களில் ஏற்படும் சினமும் சீற்றமும் மணமுறிவுகளும், இலங்கை, இந்திய நாடுகளில் மணமுறிவும் அதன் தாக்கங்களும்- மரபுவழிமுறைகளும் மணமுறிவும், இந்திய மணமுறிவு ஆலோசனையில் உள்ள சிக்கல்கள்,  பெண்கள் மீதான வன்முறைகள் ஒருபோதும் சமாதானப்படுத்தப்படவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாததொரு குற்றச்செயல், இந்தியத் திருமணச் சட்டமும் முஸ்லிம் பெண்களின் நிலையும், இந்துக்களும் மணமுறிவும் ஆகிய 22 விடயத் தலைப்புகளில் இந்நூலை எழுதியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்த நூலாசிரியர் குமுழமுனை அரசினர் பாடசாலை, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விமானிப் பட்டம் பெற்ற இவர்பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டம் பெற்றவர். கட்டுகஸ்தொட்டை, முல்லைத்தீவு, யோகபுரம், மல்லாவி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து  கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

CACHETA Sierra Poker Sports

Content Passo Um: Visite Nosso Lobby de Slots Grátis Ofertas Exclusivas Para Jogadores Frequentes Reunimos vogueplay.com descubra aqui as máquinas de slots grátis mais jogadas