அன்ரனி பாலதாஸ். யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 1வது பதிப்பு, ஆனி 2008. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.அச்சகம்).
xxxiv, 75 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த, கலாபூஷணம் அண்ணாவி அன்ரனி பாலதாஸ் தென்மோடி நாட்டுக்கூத்தாக சவுலன் சின்னப்பர் என்ற கதையை ஒன்பது காட்சிகளில் அமைந்த நாடக நூலுருவாக்கியுள்ளார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் இன்றைய துருக்கியில் உள்ள தார்ஸஸ் என்ற நகரில் பிறந்தவரே புனித சின்னப்பர். அவரது யூத மதப் பெற்றோர் வழங்கிய பெயர் சவுல். செல்வந்தரான பெற்றோர் ரோமைக் குடியைச் சேர்ந்தவர்கள். கல்வியுடன் கூடாரத் துணி நெசவாளியின் தொழிலையும் மேற்கொண்டவர். கி.பி.30இல் ஜெருசலேமில் புகழ்பெற்ற கமாலியேலிடம் விவிலிய மறைநூல் அறிஞராகவும் சட்ட வல்லுநராகவும் பயின்றவர். புனித முடியப்பர் கல்லால் எறிந்து கொல்லப்பட்டபோது கவுலும் அங்கிருந்தார். அந்நிகழ்வுக்குப் பின் கி.பி.33-35 காலப்பகுதியில் மனமாற்றத்திற்குள்ளாகி கிறிஸ்தவ எதிர்ப்பாளராகி டமாஸ்கஸ் நோக்கி ஆளணிகளுடன் கிறீஸ்தவர்களை அழிக்கவெனப் புறப்படுகிறார். உயிர்த்தெழுந்த யேசுவினால் இடையில் தடுத்தாட்கொள்ளப்பட்டு மீண்டும் கிறிஸ்து அடியாராகிறார். தொடர்ந்து சமயத்தூதுவராகி சின்னப்பராகிறார். சின்னப்பரின் வாழ்வின் சில சம்பவங்கள் சுவையான கிறிஸ்துவ மதக் கூத்துருவாக முன்வைக்கப்படுகின்றது.