8313 யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்.

ச.தனஞ்சயராசசிங்கம்; (மூலம்),  முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

61  பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-376-1.

பேராசிரியர் ச.தனஞ்சயராசசிங்கம் (1933-1977) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர். வித்தியாலங்கார வளாகத்தின் தமிழ், இந்துப் பண்பாட்டுத் துறையின் தலைவராக விளங்கியவர். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் தொடர்பாக இவர் எழுதிய 8 கட்டுரைகளைத் தேடித் தொகுத்து வழங்கியுள்ளார் பதிப்பாசிரியர் முருகேசு கௌரிகாந்தன். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இலக்கிய வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் முறைப்பெயர் வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொழிற்பெயர் வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் வழக்கில் ககரத்தின் மாற்றொலிகள், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பொர்த்துக்கெய மொழியின் செல்வாக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச்சொற்கள்ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. மு. கௌரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கலைமாணிப்பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்தினைப் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்