8312  தமிழ்ப் பாஷை எனும் தமிழியல் ஆய்வும் தத்தைவிடு தூது முதலான ஏனைய பிரபந்தங்களும்.

தி.த.சரவணமுத்துப் பிள்ளை (மூலம்), சற்குணம் சத்தியதேவன் (பதிப்பாசிரியர்). United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ,  இணை வெளியீடு, கொழும்பு 6: நூலகம் நிறுவனம், இல.7, 57அவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

80 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-93-80244-96-9.

முதல் தமிழ் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி நூலின் ஆசிரியர் ஈழத்துத் தமிழறிஞர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை 1892இல் இயற்றிய தமிழ்ப்பாஷை என்னும் தமிழியல் ஆய்வுக் கட்டுரையும், அறுசீர்கழி நெடிலாசிரிய விருத்தம், கோணை முத்துக்குமாரசுவாமி ஊஞ்சல், தத்தை விடு தூது, வாகை மாலை, பிரிவாற்றாமை, காதலாற்றாமை, கனகசுந்தரம்பிள்ளை மணஊஞ்சல், பச்சையப்பன், ஒரு சரமகவி, ஆகிய பிரபந்தங்களும் Wanted என்ற தலைப்பில் எழுதப்பட்ட அவரது ஆங்கிலக் கவிதையொன்றும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தி.த.சரவணமுத்துப்பிள்ளை 1865இல் திருக்கோணமலையில் பிறந்தவர். 15வது வயதில் சென்னைக்குச் சென்று சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். மோகனாங்கி என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது வரலாற்று நாவலை எழுதிய பெருமையும், பாரதிக்கு முன்னோடியான தத்தைவிடு தூது என்ற பெண்விடுதலை செய்யுளை எழுதியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. 1902இல் தனது 37ஆவது வயதில் இவர் மறைந்துவிட்டார். பதிப்பாசிரியர் சற்குணம் சத்யதேவன் திருக்கோணமலையின் முக்கிய கலை இலக்கிய செயற்பாட்டாளர். தனது மண்ணின் வரலாறு மற்றும் வழக்காறுகள் குறித்து ஆழமான தேடலும் அக்கறையும் உடையவர். இவரது தேடலின் முதல் நூலாக இத்தொகுப்பு அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Ultimat Casinospel Med Odds

Content Frank casino ingen insättningskod | How Skiftning Play At Av Us Online Casino Sands Regency Hotel Casino Casinospel Varianter Av Roulette Odds inom vadslagning