த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
viii, 193 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-108-04-5.
இந்நூலில் கட்டுரைகள் உரையாடல்கள், கவிதைகள், கதைகள், நாடகங்கள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் என்பன அடங்கியுள்ளன. பாடத்திட்டத்தில் உள்ள சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழித்திறனையும் விருத்திசெய்யும் நோக்குடன் ஆக்கப்பெற்றது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார். இதே ஐளுடீN இலக்கம் கட்டுரை மலர்த்தொகுதியின் வேறு தரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.