8339 தரம் 5 புலமைப் பரிசிற் பரீட்சைக்குரிய 125 கட்டுரைகள்.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(4), 144 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 125., அளவு: 21×15 சமீ.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறுவர்களுக்குப் பயன்தரும் 125 கட்டுரைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினா அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. பரீட்சையில் நான்கு சொற்களுக்குக் குறையாத ஆறு வாக்கியங்கள் எழுதுமாறே கேட்கப்படுவதுண்டு.  இந்நூலில் மாணவரின் மொழிவள விருத்தியைக் கருத்திற்கொண்டு ஆறுக்கும் மேற்பட்ட வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்