மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதற் பகுதி உடற் பருமன், நீரிழிவு, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், ஒவ்வாமை (அலர்ஜி), குடற்புண், கால் மூட்டு வலி, போன்றவற்றிலிருந்து விடுதலைபெற எமக்குப் பல்வேறு இயற்கை வைத்திய அறிவுரைகளை வழங்குகின்றது. நாம் தினசரி வீட்டில் உபயோகிக்கும் நலம் தரும் மூலிகைகள், நாம் தினசரி வீட்டில் உபயோகிக்கும் காய்கறிகள்-கிழங்குகள், நாம் அன்றாடம் உபயோகிக்கும் நலம்தரும் பழங்கள் ஆகிய பின்னைய மூன்று பகுதிகளும் நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் காய்கறி வகைகள், பழங்கள், வாசனைத் திரவியங்களாகப் பயன்படுத்தும் மூலிகைப்பதார்த்தங்கள் போன்றவற்றின் மருத்துவச் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. இறுதியாக நலம் தரும் மருத்துவக் குறிப்புகள் என்ற பகுதி முன்னைய நான்கு இயல்களிலும் சொல்லப்படாத சில மருத்துவ விடயங்களைப் பதிவுசெய்கின்றது. பாட்டி வைத்தியம்- என்று முன்னர் நம்மிடையே அறிமுகமாகியிருந்த பல விடயங்களைப் புலம்பெயர்ச் சூழலில் ஆசிரியர் பதிவுசெய்துவைக்கிறார். இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர்.