சுவாமி சி.இ.நி.குணசீலன். யாழ்ப்பாணம்: குடும்ப மேய்ப்புப் பணி நிலையம், சேந்தான்குளம், இளவாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1979. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ்.அச்சகம்).
(2), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
குடும்பத்துக்கு வழிகாட்டும் கைத்துணையாக வெளிவந்திருக்கும் ஆலோசனை நூல். ஆறதலாகவே கற்றுவரும் குழந்தை, சோம்பேறிக் குழந்தை, தொல்லைதரும் குழந்தை, எப்போதும் கீழ்ப்படியாத குழந்தை, சமூகரீதியாகப் பிழையாக உருப்படுத்தப்பட்ட குழந்தை, அமைதியற்ற அல்லது பதற்றமுள்ள குழந்தை, உணர்ச்சிவசத்தாற் குழப்பப்பட்ட குழந்தை, அவதானமற்ற குழந்தை, நேர்மையற்ற குழந்தை, ஒதுங்கி நிற்கும் குழந்தை, அச்சத்துடன் வாழும் குழந்தை, வெட்கமுள்ள அல்லது பயமுள்ள குழந்தை ஆகிய பன்னிரண்டு வகையான குழந்தைகளை நெறிப்படுத்தும் ஆலோசனைகளை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85974).