நகுலா சிவநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xxiv, 96 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
அறிவியல் உலகில் வளரும் சிறார்களுக்கு அறிவியல் நோக்கோடு உதவிடும் உத்திகளும், புலம்பெயர்ந்து வாழும் சூழலில் பிள்ளைகளின் அணுகுமுறையில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்களும் நகுலா சிவநாதனின் கட்டுரைகளில் விரவிக்கிடக்கின்றன. விஞ்ஞான ஆசிரியையான நகுலா புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார். சிறுவர்களின் திறமையை வளர்த்தெடுப்பது எப்படி, வெளிப்படுத்தும் ஆற்றல் குறைவது ஏன், பெற்றோர் பிள்ளைகள் கற்றல் செயற்பாடு, பிள்ளைகளின் ஆளுமை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு என்ன என்பன போன்ற 35 தலைப்புகளில் இவரது கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன.