செ.மகேஷ் (புனைபெயர்: நெடுந்தீவு மகேஷ்). யாழ்ப்பாணம்: செ.மகேஷ், 249/1, நாயன்மார் வீதி, 1வது பதிப்பு, பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இலங்கைக் கல்வித்திட்டத்தில் ஆரம்ப வகுப்புகளில் ஆக்கத் தொழிற்பாடு ஒன்றிணைந்த பாடப்பரப்பில் ஓர் அங்கமாகும். கடதாசியை வெட்டுவதன் மூலமும், மடிப்பதன் மூலமும் பல்வேறு தொழில்நுட்ப ஆக்கத்திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை இந்நூல் உதாரணங்களுடன் விளக்குகின்றது. கணித எண்ணக்கரு விருத்தியையும் இது ஏற்படுத்துகின்றது. இவ்வகைச் செயற்பாடுகளினால் உணரப்படும் சமச்சீர்த் தன்மையும், தொழில்நுட்ப நுணுக்கங்களும், மாணவர் விருப்புடன் கற்கத் தூண்டுவதுடன் கற்கும் ஊக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. இச்செயல்நூல் அத்தகைய நோக்கங்களை அடைய உதவுகின்றது.