முஹம்மது சரீப் றம்சீன். வவுனியா: முஹம்மது சரீப் றம்சீன், மதார் உம்மா வெளியீடு, பட்டாணிச்சிப் புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (வவுனியா: ஜேனிகா சென்டர், 155 மன்னார் வீதி, குருமண்காடு).
xii, 127 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19.5×14 சமீ.
வவுனியா பட்டாணிச்சி புளியங்குளத்தில் உள்ள வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் கணித ஆசிரியராகப் பணியாற்றும் றம்சீன் கணிதத்தில் சிறப்புப்பயிற்சி பெற்ற கலைப் பட்டதாரி ஆசிரியர். உலகின் பல்வேறு நாகரிகங்களுக்கு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது என்ற ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானின் உரைபற்றிய கட்டுரையுடன் தொடங்கி, இஸ்லாமியக் கலைகள் ஒரு கண்ணோட்டம், இலங்கை முஸ்லிம்களின் குடியேற்றம் கலாசாரம் தொல்பொருள் பற்றிய ஆய்வு, இலங்கை முஸ்லிம்களின் கலைப் பாரம்பரியம், முஸ்லிம்களும் வரலாற்றுக் கலையும், இஸ்லாமும் கவிதையும், கவிஞர்களும் இஸ்லாமும், பெரும் கவிஞர் உமர் கய்யாம், உலக மகாகவி அல்லாமா இக்பால், இசையும் இஸ்லாமியரும், கீழைத்தேய இசைக்கலையும் புகழ்பெற்ற முஸ்லிம் இசைக்கலைஞர்களும், இஸ்லாமிய கட்டிடக்கலை, அழகிய இஸ்லாமும் அழகியற் கலையும், பொங்கும் இஸ்லாமும் பொது விஞ்ஞானமும், இயற்கை அமைப்பும் அல் குர் ஆனும், புவியியல்துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு, வானியற் கலைவளர்ச்சிப் பாதையில் முஸ்லிம்கள், கணிதக் கலைச் சோலையிலே முஸ்லீம்கள், இஸ்லாமியரும் இரசாயனவியலும், ஜார்ஜ் சாட்டனின் பகுப்பு முறை, மருத்துவக் கலை வளர்ச்சியிலே முஸ்லிம்களின் பங்களிப்பு, அறிவியல் பாதையிலே இஸ்லாமிய அரசுகள் ஆகிய பல தலைப்புகளிலே இந்நூலில் பல விடயங்கள் சுவையாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129656).