8378 ஈழத்து நவீன ஓவியம்: எஸ்.ஆர். கனகசபை முதல் மாற்கு வரை.

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 106 பக்கம், 13 ஓவியத்தகடுகள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-302-0.

இந்நூல் நவீன ஓவிய மரபு பற்றிப் பேசுகின்றது.  அம்மரபில் ஜோர்ஜ் கீற்றின் இடத்தை நிர்ணயம் செய்து, ஜோர்ஜ் கீற்றின் பின்புலத்தில் ஈழத்தமிழ் ஓவியங்கள் பற்றிக் கூறி அவ்வோவியங்கள் பற்றியும் விவாதிக்கின்றது.  பண்பாட்டுப் பின்புலம், இலங்கையின் நவீனத்துவ ஓவிய மரபின் எழுச்சி, இலங்கையின் நவீன ஓவிய மரபும் அதில் ஜோர்ஜ் கீற்றின் இடமும், ஈழத்துத் தமிழ் ஓவியர்களிடையே நவீனத்துவம், ஜோர்ஜ் கீற்றின் பின்புலத்தில் ஈழத்தமிழர் ஓவியங்கள், ஒப்பாய்வின் அடியாக காணப்படத்தக்க செல்நெறிகள் ஆகிய ஆறு தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.  நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினையும் முது தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் கட்புலக் கலைத்துறையின் இணைப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

13552 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 2, ஜனவரி-மார்ச் 1995.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1995. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: