சபா ஜெயராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).
iv, 118 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-291-7.
சிறுவர் இலக்கியத்துடன் தொடர்பான கல்வியியல், உளவியல், சமூகவியல் போன்ற அனைத்துத் துறைகளின் பார்வைகளையும் உள்ளடக்கிய முழுமையான, ஆழ்ந்த நூலொன்றின் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. சிறுவர் இலக்கியம்- நோக்கும் எழுகோலங்களும், படி மலர்ச்சி கொள்ளல், தன்னிலை ஆக்கம், சமூகமயமாக்கல், சமூக நோக்கு, அறவொழுக்க விருத்தி, இலக்கியக் குறிக்கோள்கள், கற்பனை உலகம், இலக்கிய முகிழ்ப்பு, மொழி வினைப்பாடுகள், வாசிப்புத் துலங்கல்;, விளையாட்டுக்கள், நாடகம், பொம்மலாட்டம், உளப்பகுப்பு இயல், உளச் சமூக விருத்தி, பியாசே, வைக்கோட்சி, இரட்டைநிலை அசைவியம், சீர்மியம், நெகிழ் நடப்பியல், தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி, சிறுவர் இலக்கிய அருஞ்சொற்றொகுதி ஆகிய 23 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.