8445 பார்த்தேன் கதைகள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-2-9.

ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட ச.அருளானந்தனின் மற்றுமொரு சிறுவர் கதைகளைக்கொண்ட தொகுப்பு இது. இதில் வானம்பாடியும் கரிக்குருவியும்,  மரமும் கிளியும், காகமும் பறவைகளும், செண்பகமும் நத்தையும், ஆமையும் நத்தையும் ஆகிய ஐந்து கதைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு சொற்களையும் மனதில் நிலைக்கும் சிறு சொற்றொடர்களையும் பயன்படுத்தி கதைகளைச் சிறுவர்கள் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். அறிவியல், விஞ்ஞானம், யுத்தத்தின் தாக்கம், மனிதனால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள், போன்ற கருப்பொருள்களை மையமாக வைத்து நகைச்சுவையாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் கதைகளை உருவாக்கியுள்ளார். வானம்பாடியும் கரிக்குருவியும்  ஐந்தில் வளைந்தது ஐம்பதில் நிமிருமா என்ற புதுமொழியை விளக்கும் கதை. மரமும் கிளியும் – நின்றுகொண்டே மனிதருக்கு உதவும் மரத்தின் பெருமைபேசும் கதை. காக்கையால் ஒரு மரம் காப்பாற்றப்படுவதை காகமும் பறவைகளும் என்ற கதை விளக்குகின்றது.  நத்தையிடமிருந்த கச்சான் விதைகள்  செய்பகத்தால்  தப்பிய கதை செண்பகமும் நத்தையும் என்ற கதையில் சொல்லப்படுகின்றது. முயலைப் புதுப் போட்டியில் யார் வென்றார் என்பதை ஆமையும் நத்தையும் என்ற கதை விளக்குகின்றது. கேணிப்பித்தன் என்ற பெயரிலும் அறியப்பட்ட இந்நூலாசிரியர் திருக்கோணமலை- ஆலங்கேணியைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  219438).

ஏனைய பதிவுகள்

Guía de casinos en línea en México

Содержимое ¿Qué son los casinos en línea? Mejor casino online: ¿cómo elegir? Tipos de casinos en línea Casinos online confiables Casinos online con bono gratis