இராஜதிலகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 23.5×18 சமீ.
சிறுவர்களுக்கான இரண்டு சித்திரக்கதைகளைக் கொண்ட இந்நூலில் தாராவும் குகை மனிதர்களும் என்ற கதை பக்கம் 5-38 வரையும், நெருப்பு உண்டாக்குவோரின் யுத்தம் என்ற கதை பக்கம் 39-71வரையும் இடம்பெற்றுள்ளன. மலேசியாவில் பிறந்த ராஜதிலகம், தன் பெற்றோருடன் 14வது வயதில் இலங்கைக்குத் திரும்பியவர். தொழில்ரீதியாக கணக்காளரான இவர் இலங்கையிலும் மலேசியாவிலும் பணியாற்றியுள்ளார். தனது சொந்த நிறுவனமான Print Plus என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். கணிதத்துறையில் மிகுந்த ஆர்வம்கொண்ட இவர் புதிர் கணக்கு பற்றி New Puzzle.com என்ற இணையத்தையும் நடத்திவருகின்றார். தினக்குரல் பத்திரிகையில் மாணவர்களுக்கான அறிவு ஆரம் பகுதியில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.