8467 திருக்குறள் புதிய தரிசனங்கள் இரண்டு.

நா.மகேசன் (வானொலி மாமா). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, ஜுலை 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

232 பக்கம், விலை: இந்திய ரூபா 170., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-02-4.

இந்நூல் இரண்டு பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. முதற்பிரிவு கேதீசர் முதுமொழி வெண்பா  என்பதாகும். வெண்பாவின் முதலிரு அடிகளிலும் தேர்ந்தெடுத்த திருக்குறளின் பொருள் விளங்குவதற்கு ஏதுவான செய்தியைச் சொல்லி, பின்னிரண்டு அடிகளிலும் குறளை அமைத்து 133 வெண்பாக்களை அமைத்து வழங்கியிருக்கிறார். வெண்பாக்களுக்குரிய  விளக்கமும் அவற்றுக்கெதிரே தரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ATBC) திருக்குறள் விளக்கு என்னும் அறிவுச்சுடர் நிகழ்ச்சியில்  இவற்றில் சில வெண்பாக்கள் ஒலிபரப்பானவை . இந்நூலின் இரண்டாம் பிரிவில் ஆசிரியர் எழுதிய திருக்குறள்கள் பற்றியதான சிறு வானொலி நாடகங்கள் 25 இடம்பெற்றுள்ளன. பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களே எடுத்துக்கொள்ளும் இச்சிறு நாடகங்களின் வழியாக சிறுவர்களுக்குத் திருக்குறள் வழியாகச் சுவையான படிப்பினைகளை  உரையாடல்களின் மூலம் வழங்குகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமாகி வானொலி மாமா என்று 1965ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ச் சிறார்களால் கொண்டாடப்படும் நா.மகேசன் ஈழத்துத் தமிழ்க் குழந்தை இலக்கியத்துறைப் படைப்பாளிகளுள் முன்னோடியாக இருந்தவர். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Ostmark

Content Casino 6Black Casino | Diese sichersten Gern wissen wollen zur App „Mobiles Bezahlen“ Der günstiges Taschentelefon erreichbar in Bruchrechnung zulegen. Mobilfunktelefon besorgen nach Rechnung

Asexuelles Dating 888 mobile casino

Content Iqos Iluma Refreshed Gestaltungstipps Für jedes Deren Online Wie gleichfalls Wähle Meine wenigkeit Meine Pansexuelle Dating Wirklich so Herunterladen Diese Google Sheets Für jedes