ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜுலை 2009. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
வித்யாபூஷணம், சாதக சிரோமணி பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா தொகுத்திருக்கும் இந்நூல் வடமொழியில் அமைந்த தோத்திரப் பாடல்களை தமிழ்மொழிமூலம் வழங்குகின்றது. ஆலயக் கிரியை மரபில் பூஜை வழிபாட்டின் நிறைவிலே ஆசீர்வாதத்திற்கு முன்னர் ஸ்தோத்திரம் இடம்பெறுகின்றது. பல்வேறுபட்ட மூர்த்தங்களுக்கும் விதவிதமான ஸ்தோத்திரப் பாடல்கள் வடமொழியில் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை இசையோடு பாடும்போது பாடுபவரும் கேட்பவர்களும் பக்திப் பரவசமாகி இறைவனுடன் ஒன்றிவிட முடிகின்றது. அவ்வப்போது பல ஸ்தோத்திர நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எனினும் சம்ஸ்கிருத எழுத்துத் தெரியாத அன்பர்களின் நன்மை கருதிப் பல முக்கியமான ஸ்தோத்திரங்களைத் தமிழ் எழுத்தில் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கின்றார். அவ்வகையில் இந்நூலில் ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ சிவ ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ தேவி ஸ்தோத்திரங்கள், மற்றும் தேவதா ஸ்தோத்திரங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.