ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. யாழ்ப்பாணம்: குப்பிளான் சொக்கவளவுச் சோதி விநாயகர் ஆலயம், குப்பிளான், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xiv, 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
இராமாயணம் பிறந்த கதை, இராமன் அவதாரம், விசுவாமித்திரர் கதை, திரிசங்குவின் கதை, வசிட்டர், இராமனைத் தருவீர், தாடகை, இராம இலக்குவன் வேள்வி காத்தமை, சீதையின் கதை, சாகரன் கதை, பகீரதன், அகலிகையின் கதை, சீதா கல்யாணம், பரசுராமனின் கதை, இராமன் முடிசூடுதல், கைகேயியின் கதை, கூனியின் துர்ப்போதனை, பெண்ணா பேயா, கைகேயி வியந்தாள் போன்ற 80 தலைப்புகளில் எழுதப்பட்ட இராமாயணக் குட்டிக் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இராமாயணக் கதாபாத்திரங்களை முன்வைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட சிறு சம்பவங்கள் தனித்தனிக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் பெரும்பாலும் 1-2 பக்கங்களுக்குள் அடங்கிவிடுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 209505).