ஏ.எம்.அப்துல் கஹ்ஹார். அட்டாளைச்சேனை-04: இஸ்லாமிய நிலையம், தென் கிழக்குப் பிராந்தியம், டீன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்).
148 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ., ISBN: 955-8220-01-09.
திருக்கோணமலை மாவட்டத்தின் சின்னக்கிண்ணியா-முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் அ.மு.அப்துல் கஹ்ஹார். கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 1954ம் ஆண்டு முதல் வள்ளல், அண்ணல்தாசன், ஆனாக் கானா, கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர், கிண்ணியா ஏ.எம்.ஏ. கஹ்ஹார் ஆகிய புனைபெயர்களில் கதை, கவிதைகள் என எழுதி வருபவர். அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. இவர் எழுதி வெளிவரும் நான்காவது நூல் இது.