அ.மு.அப்துல் கஹ்;ஹார். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
(12), 93 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14 சமீ.
ஜனாப் அ.மு.அப்துல் கஹ்ஹார் 1954ம் ஆண்டிலிருந்து வள்ளல், கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர், என்னும் புனைபெயர்களில் எழுதிவருகிறார். ஏற்கெனவே இவரது இரு நூல்கள் (நற்பண்பும் நபி மொழியும், அண்ணல்மா நபி பிறந்தனரே) வெளிவந்துள்ளன. பிரதேச வாரியாகவும், அகில இலங்கை மட்டத்திலும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார். கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றியவர்.