பஹீமா ஜஹான். சென்னை 600078: வடலி வெளியீடு, எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
68 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-908405-4-5.
வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஈழத்து முஸ்லிம் பெண் கவிஞரின் கவிதைத் தொகுப்பு. இயற்கை தழுவிய கற்பனைகளாலும், அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும், நிறையும் பெண் உணர்வுகளே இவரது கவிதைகளின் இயல்பாய் இருக்கின்றது. ‘கின்னரர் தம் இசையிழந்த நிலமெங்கும்’ தாம் பெற்றெடுத்தவர்களைப் பறிகொடுத்த பெண்களின் ஒப்பாரி அலைந்துகொண்டிருப்பதை, தனக்கு வரம்புகளிடும் ஆக்கிரமிப்பாளர்களின் கிரீடங்களை மறுத்தவாறு, பாடுகிறார் பஹீமா ஜஹான். அவரது சொற்களில் இருக்கின்ற சகோதரத்துவமும் அன்பும், அதிகாரமற்ற உலகிற்கான அழைப்பாக ஒலிக்கின்றன.