அல்லாமா இக்பால் (மூலம்), ஜின்னாஹ் ஷெரிப்புத்தீன் (மொழிபெயர்ப்பு). மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்).
xii, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×13.5 சமீ., ISBN: 955-97349-9-7.
அல்லாமா இக்பாலின் ஷிக்வா ஜவாபே ஷிக்வா என்ற நூலை கவிதைவடிவில் ஆக்கியுள்ளார். ஷிக்வா எனும் சிறு கவிதை நூல் இறைவனை நோக்கித் தொடுத்த ஒரு அடியவனின் கேள்விக்கணைகளாகும். உள்ளக்குமுறலின் வெளிப்பாடுகள் இதய ஆழத்திலிருந்து எழுந்த கற்பனையுடன் கவிச்செழுமை மிக்க முறையீடுகளாக அமைந்தன. அன்றைய இஸ்லாமிய உலகின் அவல நிலைமையையும் முஸ்லிம் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிகளையும் மேற்கின் யுத்த அதிகாரத்திற்குள் முடங்கிப் போயிருந்த முஸ்லிம் உலகின் கடந்தகால வீர வரலாற்றையும் அல்லாமா இக்பால் தனது ஷிக்வாவில் முன்வைத்துள்ளார். 1909இல் லாகூர் அன்ஜுமன் ஹிமாயத்துல் இஸ்லாம் மாநாட்டில் இக்கவிதையை இக்பால் படித்தார். அல்லாவை நோக்கி அவர் முறையீடுகளைச் செய்திருந்தாலும் உண்மையில் முஸ்லிம்களை நோக்கிய அவரது கேள்விகளாகவே இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.