8485 ஆன்மாவின் வாசனை: கவிதைச் சரம்.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர். சமூக அக்கறை கொண்ட கவிஞனின் உள்ளக் குமுறலாக இக்கவிதைகள் வெளிவந்துள்ளன. இயற்கையின்மீது கொண்ட மோகம், சக மனிதர்களில் கண்ட குறைகள் சமூகக் கறைகளாகப் பதியும்போது ஏற்படும் தார்மீகக் கோபம், தமிழ் இனத்தின் மீதான தாபம், உறவுகளுடனான பிணைப்பு என இக்கவிதைகள் விரிகின்றன. மானுடம் எங்கே?, அகதி வாழ்வு, ஆறாத அந்த வலி, கடவுளுடன் ஒப்பந்தம், காதலெனும் பெருமருந்து, ஆடிவரும் ஆடி, நாங்கள், ஆன்மாவின் வாசனை, கறுப்பு ஞாயிறு, புகலிடப் பிள்ளை, பலிமோகம், காவு கொண்ட கடல்கோள், உன்னுள் உன்னை விழிப்புறச் செய், வெல்லத் தமிழ் அது வெற்றித் தமிழ், அந்த விந்தை மனிதர் வருவாரா?, விதைப்பும் விளைச்சலும், யாரொடு நோவோம், தோழியும் நானும், எனக்கு என்மீது கோபம், பேசும் மொழியாய் என்னுடன் என்றும், உண்மையென நம்பமுடியவில்லை, திருமணம் சுகமே சுகமே, பகை, வள்ளுவன் வழியில் பண்புகள் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் மலர்ந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

13387 வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு- 2014.

NESR நெறிப்படுத்தும் குழு. யாழ்ப்பாணம்: Northern Education System Review, மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xxvi,