குரும்பையூர் தம்பித்துரை ஐங்கரன். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஐப்பசி 2005. (யாழ்ப்பாணம்: ஆதவன் அச்சகம்).
(17), 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.
குரும்பசிட்டியில் பிறந்து உள்ளகப் புலப்பெயர்வின் காரணமாக இளவயதில் தாய்மண்ணைப் பிரிந்து வவுனியா-பண்டாரிக்குளத்தில் வசித்து வரும் இளம் கவிஞர் ஐங்கரன். நெடும் போராலும்-இடையிடையே மலரும் சமாதானங்களாலும் குழம்பிப்போனவொரு சமூகத்தின் பிரதிநிதி. அழியாத மனவடுக்களை அவ்வப்போது கீறிப்பார்த்துக்கொள்ளும் ஒரு கவிஞன். இக்கவிஞனின் முப்பத்திநான்கு கவிதைகளும் யதார்த்த நிலையைத் தரிசித்து, நிதானித்து, அதன் சமூகப் பின்னடைவுகளை-அவற்றின் மூலகாரணங்களைக் கண்டுணர்ந்து, அவற்றைக் களைந்தெறியும் பொறுப்புடனும், வேகத்துடனும் இந்நூலில் பதிவாகியுள்ளன.