நிர்மலா (தான்யா), பிரதீபா கனகா-தில்லைநாதன் (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 024: வடலி வெளியீடு, 13/54, 10ஆவது குறுக்குத் தெரு, ட்ரஸ்ட் புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
172 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 819084056-8.
ஈழத்தின் கவிதை வழியினைக் கடந்தும் தொடர்ந்தும் ஈழத்தோடு அவர்களுடைய பண்பாட்டையும் நினைவையும்- வெவ்வேறு விகிதங்களில் பகிர்கின்ற அல்லது பகிராத குறிப்பிட்ட சில பெண்களின் அனுபவங்களினூடாக, ஓர் அந்நியப்பட்ட சமகால வாழ்வினை இத்தொகுப்பு பதிய முனைகின்றது. இந்நூல் உருவாகிப் பதிப்பாக்கப்படும் 2003-2009 காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள், யுத்த நிலத்துக்கு வெளியில் வாழும் இப்பெண்களது எழுத்திலும் பதிவாகியுள்ளன. தமது நிலத்தினதும், அந்நிலத்திலிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை, தமதான எல்லைகளுடன் இந்தக் கவிதைகள் பாடுகின்றன.