ஈழவாணி (இயற்பெயர்: வாணி ஜெயா தீபன்). சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11ஃ29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81095-77-5.
ஈழவாணியின் கவிதைகள் ஈழத்தின் போர்க்கால துயர நெருப்பினூடே எழுந்தவை. அழிவின் விளிம்பில் நின்று வாழ்வின் மீட்சியை வேண்டுபவை. துயரத்தின் நிழலைப் பின்தொடரும் இவரது சொற்கள் அன்பின் காதலின் வெளிச்சத்தையும் தீண்டத் தவறவில்லை. மூன்று பிரிவுகளில் 44 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழவாணி இலங்கையில் வவுனியாவில் பிறந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தேடல், செந்தணல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது புலம்பெயர்ந்து மலேசியாவிலும், இந்தியாவிலுமாக வசித்து வருபவர்.