நீ.பீ.அருளானந்தம். கல்கிசை: திருமகள் பதிப்பகம், இல.7, லில்லியன் அவென்யு, 1வது பதிப்பு, மார்கழி 2010. (கொழும்பு: திருமகள் பதிப்பகம்).
xxiv, 207 பக்கம், சித்திரம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1055-09-7.
கவிஞன் காலத்தோடு ஒன்றித்து இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு எழுத்தும் புரட்சிமிக்கதாக இருக்கவேண்டுமெனவும் இக்கவிதைத் தொகுதி புலப்படுத்துகின்றது. வெறும் கற்பனையுடன் மாத்திரம் நில்லாது, எம்மை நிஜ வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லும் கவிதைகளாக இவை அமைந்துள்ளன. இலங்கையின் இருண்ட போர்க்காலமான 2009இல் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலான யுத்தத்தினை வரிக்கு வரி வலியோடு ஆங்காங்கே கவிதையாக்குகின்றார். யுத்தபூமியின் கொடுமைகளை தியானத் திறவு, சாம்பல் பூசிய மனம், கீறல்வழி, நடுக்காட்டுப் பாதை, இவைதான் இன்பம், தங்கம் அக்கா, பின்வாங்கல், தோலுரித்துக்காட்டும் சித்திரங்கள், நெஞ்சில் சிறைப்பட்ட காட்சிகள், வரலாறு, கடந்து போகுதல், வலி-கவலை, ஒரு சுக்கும் இல்லை, கருவேலமுள் குத்தும் வலி, உனக்கு ஒன்று சொல்கிறேன், விதை தூவும் பாடல், கொல்லும் கருவிகள், விஷப்பல் முளைத்தவர்கள், தீத்தொடல், வாசல் போன்ற தலைப்புகளில் நாற்பதுக்கும் மேலான கவிதைகள் இத்தொகுப்பில் இடமபெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218230).