சேரன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 18×17.5 சமீ., ISBN: 978-93-80240-92-3.
ஈழத்தின் ஊழிக்கும் இனப்படுகொலைக்கும் பின் கவிதை எழவோ எழுதவோ முடியுமா என்ற கேள்விக்குப் பதிலாக முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக்கடலுக்கும் பின்னான சேரனின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஊழி என்ற பிரிவின் கீழ் ஊழி, கைவிடப்பட்டவன், கொலைக்காட்சி, அஞ்சலி, தலைமுறை, உடல், காணி நிலம், மணல்வெளி, காடாற்று, அறம்பாடியது, நந்திக்கடல், காலற்றவன் கனவு, அகாலி, தொலைபேசி அழைப்பு, இருள், தற்கொலை, குரல் ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் கடல் என்ற பிரிவின்கீழ் கடலின் கதை, கரடியின் கதை, சிட்டுக்குருவியின் கதை, புலம், அக்கக்கா, ஒளி பரவும் பெரும்பொழுது, பிறப்பு, மேலும் ஒரு பிரிவு, அறம், கடல்கோள், மலை ஏறல், இருட்கடல், சிறகு, எதை நான் உனக்குத் திருப்பித்தருவது, மாறாத பாடல், இன்றிரவு, மதுக்கிண்ணம், மகன்-மகள் ஆகிய தலைப்புக்களில் அமைந்த கவிதைகளுமாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.