சக்தி சக்திதாசன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2007. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
172 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
மனதில் ஏதாவது தாக்கம் நிகழும்போது எண்ணங்கள் கருவுற்று, கைகள் துடித்துப் பிரசவித்த இக்கவிதைகள் பிரசுரத்திற்காகவோ புத்தகத்துக்காகவோ எழுதப்பட்டதல்ல. ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக அவ்வப்போது பிறந்து, இணையங்களில் ஆங்காங்கே பிரசுரமாகிப்பின்னர் மௌனித்துவிட்ட உணர்வுப் பூக்கள் இவை. இன்று பூந்துணராகத் தனிநூலாகியுள்ளது. இதில் எளிமையாக எழுதப்பட்ட கவிதைகளும் உண்டு. புரியாத உணர்வுகளால் உந்தப்பட்டு வடித்த கவிதைகளும் உண்டு. பாசம் மிகுதியால் பிரவகித்த கவிதைகளும் உண்டு. ஈழத்தின் வட பகுதியில் நல்லூர் கைலாயபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சக்தி சக்திதாசனின் மூன்றாவது நூல் இது. 1970களில் உயர்கல்விக்காக, லண்டனுக்குப் புலம்பெயர்ந்து, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இங்கிலாந்தின் பிரிட்டிஷ் டெலிகொம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.