ஈழவாணி (இயற்பெயர்: வாணி ஜெயா தீபன்). கோயம்புத்தூர் 641017: தகிதா பதிப்பகம், 4ஃ833 தீபம் பூங்கா, கே.வடமதுரை, 1வது பதிப்பு, ஆவணி 2010. (கோயம்புத்தூர்: ஐடியாஸ் பிரின்டர்ஸ்).
xiv, 60 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18.5×12.5 சமீ.
‘கடந்துபோன பொழுதுகளில் லயித்தும், வெறுத்தும் எழுதிப்போட்ட மன ஓலங்கள் தொகுப்பாய் நூலாகின்றபோது பழைய நினைவுகளும் வாழ்வதாய் தோன்றுகின்றது. சில கவிதைகளோடு சில நிமிடங்களில் பேசலாம். சில கவிதைகளோடு கண்ணீர்த்துளிகள் வீழலாம். எல்லா மீட்டல்களுமே பயண இறுதியில் மிஞ்சும் பயணச் சீட்டுகள் தான். கண்களில் தடுக்கும் பொழுதுகளில் எழும் பயண நினைவுகளாய் இவையும் நீண்டு வீழ்ந்து கிடக்கும் இறந்துபோன நாட்களாயும் தொலைந்துபோன சந்தோஷங்களாயும் மீதம் தலைப்புகள் இடும் முன்னமே எதிர்பாராமல் நிகழ்ந்து முடிந்துவிடும் திடீர் நிகழ்வுகளாயும் தங்கிவிட்டன. இவை தலைப்புகள் இல்லாமலே வாழ்வில் நிகழ்ந்து மறையும். ஒரே தலைப்பில் நிகழ்ந்து போகும். இவற்றிற்கெல்லாம் எப்படி வெவ்வேறு தலைப்புகளிடுவது? இதனாலேயே தலைப்பு இழந்தவையாகப் பிறந்து விட்டது இக்கவிதை நூல் எனத் தனது முகவுரையில்ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஈழவாணி இலங்கையில் வவுனியாவில் பிறந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தேடல், செந்தணல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது புலம்பெயர்ந்து மலேசியாவிலும், இந்தியாவிலுமாக வசித்து வருபவர்.