8526 நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திராத மழை.

மயூ மனோ. சென்னை 600 024: வடலி வெளியீடு, B2/5, அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

95 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

காதலும் அதன் பின்னரான தனிமையும் நிலம் விட்டேகிய ஆற்றாமையின் இருள்வெளியும் விரவிக் கிடக்கும் மயூ மனோவின் சொற்கள் புலம்பெயர்ந்து வாழும் அவருடைய தலைமுறையின் சாட்சியம். வீட்டின் கதவுகளுக்கு உள்ளே பிறந்த நிலத்தின் கலாச்சாரத்தையும் கதவுகளைத் தாண்டி தாம் வாழும் நிலத்தின் கலாச்சாரத்தையும் சமன்செய்யமுடியாமல் இரண்டுக்கும் நடுவில் நசுங்கியபடி இருக்கிறது புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறை. அவ்வகையான தன் நிகழ்காலத்தை சொற்கள் கொண்டு கடக்கமுனையும் அக்காலத்தின்மீது கேள்வியெழுப்பும் பெண் மனத்தின் அகப்பாடல்களே இங்கு கவிதைகளாக விரிகின்றன. இணையத் தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி கவனஈர்ப்பைப் பெற்ற மயூ மனோவின் கவிதைகளின் தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்