8530 நிஜத்தின் நிழல்: கவிதைத் தொகுப்பு.

சு.திருப்பரங்குன்றன். லண்டன்: சு.திருப்பரங்குன்றன், SLEE வெளியீடு, 47, The Heights, Northolt, Middlesex, UB5 4BP, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (லண்டன்: ஜே.ஆர்.அச்சகம், வோல்த்தம்ஸ்ரோ).

xvi, 85 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00, அளவு: 20.5×14.5 சமீ.

கவிஞர் காரை சுந்தரம்பிள்ளையவர்களின் (20.5.1938 -21.9.2005) மகனான திருப்பரங்குன்றன், தந்தையின் இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். யாழ். மத்திய கல்லூரி, யாழ். புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். சிறுவயது முதல் கவிதைத் துறையில் ஆர்வம்கொண்டவர். சோ.பத்மநாதன், கல்வயல் வே.குமாரசாமி, ச.வே.பஞ்சாட்சரம், நாவண்ணன், ஜெயசீலன் போன்ற மூத்த கவிஞர் பலருடன் இணைந்து அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்குகளில் பங்கேற்றவர். நல்லாசிரியர்களிடமிருந்தும், தந்தையிடமிருந்தும் தமிழ் மரபிலக்கணத்தைக் கற்றவர். பாடசாலை வாழ்வில் யாழ். மகளிர் மன்றம் நடத்திய மகளிர்தினப்பாடசாலைகளுக்கிடையிலான  பட்டிமன்றப் போட்டியில் வென்று சிறந்த இளம் பட்டிமன்றப் பேச்சாளராக பேராசிரியர் கா.சிவத்தம்பியிடமிருந்து பரிசில் பெற்றவர். தமிழ்த்தினப் போட்டிகளுக்காகத் தொடங்கிய கவிதைப் பயணம் இன்று நிஜத்தின் நிழல் என்ற கவிதைத் தொகுப்பில் வந்து நிற்கின்றது.  இந்நூலில்  திருப்பரங்குன்றனின்  58 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.  அவரது கவிதைகள்- கவிதா உலகில் பெரும் எதிர்பார்ப்பைச் சந்திக்கும் என்ற அக்கறையுடன் தனது மரபுக் கவிதைகளை நூலுருவில் அவதானமாகத் தேர்ந்து பதிவுசெய்திருக்கிறார். 

ஏனைய பதிவுகள்

11223 சேசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் பாமாலை.

சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: திருமதி சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம், 27/2, ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணை, இணை வெளியீடு, Seychelles: அருள்மிகு நவசக்தி விநாயகர் கோவில், P.O.Box 88, Victoria, 1வது பதிப்பு, ஜுன் 1992.

2024’te Sıralanan 10 Çok Daha İyi Pelet Kazanı

İçerik Pinko kumarhanesinde nasıl para kazanılır? Pinko kumarhanesine para yatırın Kumarhane Markamızın pelet otoklavı, farklı benzin türlerine uyum sağlayabilmesi nedeniyle kullanım çok yönlülüğü alanında en