8532 நீயுருட்டும் சொற்கள்.

ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: எழினி, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் அச்சகம், காங்கேசன்துறை வீதி).

(6), 60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-54304-1-8.

இந்நூலிலுள்ள மயூரரூபனின் 31 கவிதைகளும் இருள் கலந்த வாழ்வின் கதைகளைப் பேசுபவை. யுத்தம் சப்பித் துப்பிய மனிதர்களை, கோரமாக்கப்பட்ட அவர்களின் முகங்களை, மனக்கிடங்கின் ஆழத்தில் அமிழ்ந்து போயிருக்கும் வாழ்வு பற்றிய ஏக்கங்களைப் பேசுபவை. சமூகவியற் புலமையினூடாக வாசிப்பும் தேடலும் இக்கவிதைகளில் தெரிகின்றது. கவிதைகளுக்குத் தேர்ந்து கொள்ளும் மொழி மிகவும் கட்டிறுக்கமானது. தமிழ் மரபிலிருந்து பல சொற்களை மீளவும் கொண்டு வருகிறார். நரனெறிகங்கு, குருட்டுச் சுனைகள், துயரிசையின்அவத்தை போன்ற சொற்சேர்க்கைகள் புதியவை. அதிகமும் இறுதி யுத்தத்தின் பின்னர்  எழுதப்பட்டவையாக இவை இருப்பதால் கவனத்தைக்கோரும் கவிதைகளாகவும் இருக்கின்றன. (பின்னுரையில் துவாரகன்). இந்நூலின் மேலட்டையில் பிக்காசோவின்  நவீன ஓவியம் (மண்டலின் இசைக்கருவியை வாசிக்கும் பெண்) இடம்பெற்றுள்ளது.இதே ஓவியத்தை அட்டைப்படமாகக் கொண்டு கொற்றை பி.கிருஷ்ணானந்தனின் இன்னுமோர் உலகம்: சிறுகதைகள் (ஞானம் வெளியீடு, கொழும்பு,  பெப்ரவரி 2012) சமகாலத்தில் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Păcănele Sizzling Hot Gratis

Content Leovegas Online Casino Končí V Čr | Slot attraction Zapytania Jak i również Reakcji Na temat Grze Sizzling Hot Powinno się zapełnić rejestrowania się

No Deposit Bonus Casino Highway

Content Super flip no deposit: Zar Casino Coffee and Doughnut Promotion Best For Downloadable Casino Software Best Michigan Online Casino No Deposit Bonus Codes July