8533 நெருங்கிய பொருள் கைப்படவேண்டும்: கவிதைகள்.

லினோதினி சண்முகநாதன். (புனைபெயர்: பார்வதி). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

152 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழாலை கிழக்கைச் சேர்ந்த வினோதினி, யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடம் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி பயின்றவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்றார்.  அங்கு TTN தொலைக்காட்சியின் மழலைகள் பூங்கா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். அதே தொலைக்காட்சியில் இடம்பெற்ற வண்ணை தெய்வத்தின் சித்திரம் பேசுதடி கவிதை நிகழ்வில் ஒராண்டுகாலம் பங்கேற்றவர். தன் கணவருடன் இணைந்து ஸ்டார் இசைக்குழுவில் பாடகியாகவும் இயங்கி பிரான்ஸ் வாழ் ஈழத்துத் தமிழ்ச் சமூகங்களிடையே நன்கு பரிச்சயமானவர். இக்கவிதைத் தொகுதியில் வினோதினி – கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, மாவீரர் வணக்கம், கவியரங்கக் கவிதைகள், சுதந்திரமும் பெண் விடுதலையும், சின்னஞ்சிறு கிளியே, அம்மா, காதல், உன்னால் முடியும், இயற்கையும் மனிதனும், மென்மையும் வன்மையும், விண்ணப்பம், புலம்பல், பிரிவும் வாழ்த்தும், இறைவனும் நானும் ஆகிய பிரிவுகளின்கீழ் 55 கவிதைகளை தொகுத்துவழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்