சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: செல்வி ராமேஸ்வரன், E2/4,அண்டர்சன் தொடர்மாடி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2008. (மகரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன).
(6), 114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-99222-5-4.
17 நகைச்சுவை குறுநாடகங்களைக்கொண்ட நாடக நூல். மொழிப்பற்று, றோஸ்மேரியும் ஓர் அறைகுறை சுப்பிரமணியமும், இது ஒரு கடத்தல் விவகாரம், ஆளில கொஞ்சம் ஐமிச்சம், வீட்டுக்கு வீடு, ஒரு பொன்மாலைப் பொழுது, நத்தார் பரிசு, சுதந்திரக் காற்று, இது ஒரு கப்பலின் கதை, கறுப்பும் வெள்ளையும், வாழ்க பெண்கள் சங்கம், எனக்கொரு மகன் பிறப்பான், ஒரு ராஜா ராணி கதை, மாடில்லாப் பொங்கல், வீரன் ஒருவன் கோழையாகிறான், புது வருட சாரி, மாப்பிள்ளை பலகாரம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 நாடகங்கள் இதில் உள்ளன. கல்யாணத் தரகர்களின் தகிடுதத்தங்கள், பெண்களின் பேராசை, திருமணப் பிரச்சினைகள், ஆண்களை ஆட்டிப்படைக்கும் இல்லத்தரசிகள் என்று இந்நாடகங்களின் களங்களும் பாத்திரங்களும் சித்திரிக்கப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205683).