8559 மானிடச் சிக்கல்: அரங்க அளிக்கைகள் ஐந்து.

முத்து இராதாகிருஷ்ணன் (இயற்பெயர்; முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்). வவுனியா: அரங்க செயற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, மார்கழி, 1998. (வவுனியா: நவயோகா அச்சகம்).

xii, (7), 92 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன ஓவியராக, நாடகவியலாளராக, சிறுகதை எழுத்தாளராகப் பல்வேறு தளங்களில் அறியப்பட்டவர் முத்துக்குமாரு  இராதாகிருஷ்ணன். இலங்கை கல்வி நிர்வாகச் சேவையில் இணைந்து திருக்கோணமலையில், வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். இந்நூலில்  அவரது  படைப்புக்களான பள்ளியெழுச்சி, மானிடச் சிக்கல், நீளும் பாலை, முகமற்ற மனிதர், நேசத்தால் நிறைந்த நெஞ்சள் ஆகிய  ஐந்து நாடக எழுத்துரக்களும், பின்னிணைப்பில் “மானிடச் சிக்கல்: அரங்க எழுத்துருக்கள்” பற்றிய கந்தையா ஸ்ரீகணேசனின் விமர்சனக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இந்த நாடக இலக்கிய நூலுக்கு 1998ம் ஆண்டுக்குரிய தேசிய சாகித்திய விருதும் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருதும் கிடைத்துள்ளன. நூலில் முதற்பதிப்பு 1998 எனக்குறிப்பிட்டாலும், உள்ளடக்கத்தில்; 2007இல் வெளியிடப்பட்ட துயரப்பாறை நூல் பற்றிய தகவல் காணப்படுகின்றதால், இந்நூல் 2007க்குப் பின்னைய மீள்பதிப்பாகக் கருத இடமுண்டு. இதுபற்றிய தகவல் எதுவும் நூலில் பதிப்புரையில் குறிப்பிடப்படவில்லை.

ஏனைய பதிவுகள்

Jungle zu dieser Seite navigieren Fruit

Content Fruit Zen, Das Automatenspiel Für Entspannte Stunden Maklercourtage Funktionen Im Fruit Farm Novoline Slot Yeti Knüller Gebührenfrei Spielen Empfohlene Spiele Falls du via zu