8562 ஆர்கொலோ சதுரர்: நடன நாடகம்.

சாந்தினி சிவநேசன், தவநாதன் ரொபர்ட், சா.சிவயோகன், இ.முருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: விகடன் பதிப்பகம்).

xviii, 165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பஞ்சபாண்டவர்-கௌரவரின் பாரதப் போரின் பின்னணியில் எழுந்த நாடகமான ஆர்கொலோ சதுரர்- பரதநாட்டிய ஆற்றுகை நெறிப்படி அமைக்கப்பட்டது. இந்த  நடன நாடகம் 5.1.2003இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் முதன்முதலில் மேடையேற்றப்பட்டது. தொடர்ந்து அவ்வாண்டில் ஏழு தடவைகளும், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இரு தடவைகளும் மேடையேற்றப்பட்டன. இலங்கையில்  விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, யுத்தம் இடைநிறுத்தப்பட்டு, “சமாதானம்” நிலவிய காலத்தில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்தின் நூல்வடிவம் இதுவாகும். பின்ணிணைப்புகளாக,  படைப்பாக்கத்தில் இணைந்தவர் தம் கருத்துக்கள், ஆற்றுகையில் பங்கேற்றவர்களது அனுபவங்கள், விமர்சனங்கள் என்பன 61-165 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. மாணிக்கவாசகரின் திருவாசகத் தொகுதியில் கோவில் திருப்பதிகத்தில் வரும் பத்தாவது பாடலில் “தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கராஆர்கொலோ சதுரர்” என்ற பாடல் அடிகளிலிருந்து நாடகத்தின் தலைப்பு பெறப்பட்டுள்ளது. (சதுரர் என்பதன் பொருள் கெட்டிக்காரன். யார் கெட்டிக்காரன்? நீயா நானா- என்று கேட்பது இத்தலைப்பின் பொருள்).

ஏனைய பதிவுகள்

Age the new Gods OLBG Slot Comment

Blogs Whenever is the age of the new Gods Jesus of Storms position put-out? Enjoy A lot more Greek-Themed Video game Finest Playtech Harbors These

Mot 2025 75% Prime jusquà 1600

Ravi Cette mot sur Jackpot Roll Casino: magic stone jeu de casino Laquelle sont nos points forts en compagnie de JackpotCity Casino ? Pactole City