8563 தீரன் திப்பு சுல்தான் காவியம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (தெகிவளை: Kleen Printers, No. 16, School Avenue, Off Station Road).

xx, 352 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-96932-4-6.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ஏழாவது காவியமாக 91 அத்தியாயங்களில் விரிந்துள்ள இந்நூல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தியாகியாகப் போற்றப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கையைப் பாடுகின்றது.  தனது நாட்டைச் சொந்தம்கொண்டாட வந்த  அந்நியரை நாட்டைவிட்டுத்துரத்தும் குறிக்கோளுடன் எழுந்து தன் மண்ணுக்காகக் களத்தில் நின்று போராடி மடிந்த வீரபுருஷராகப் போற்றப்படுபவர் இவர். இந்நூலில் உத்தமப் பண்புகளும் ஓர்மையும்கொண்ட அந்த அதிசய சுல்தானை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அழகு தமிழில் எமக்கு அறிமுகப்படுத்துகின்றார். இந்தியாவில் மைசூரின் புவியியல் அமைப்பு, ஆட்சி அமைப்பு, திப்புவின் தந்தை ஹைதர் அலி, நாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள், இளமைக்கல்வி, பதினைந்து வயதில் கண்ட யுத்தமுனையும் திப்புப் புலியும், ராணா ஒப்பந்தம், இரண்டாவது மைசூர் போர், ஹைதரின் இறுதிக்காலம், திப்புவின் ஆட்சித்திறன், நிர்வாகத்திறன் போன்ற தலைப்புகளினூடாக இக்காவியம் விரிவாகப் பாடப்பட்டுள்ளது. இலங்கை அரச சாகித்திய மண்டல விருதினையும், தமிழியல் விருதினையும் பெற்ற காவியம் இது.

ஏனைய பதிவுகள்