8576 உங்கள் தீர்ப்பு என்ன?

உதயணன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

xxiv, 176 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 17.5×12.5 சமீ.

யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயணன் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர். பின்னாளில் புலம்பெயர்ந்து பின்லாந்தில் வாழும் இவ்வீழத்துப் படைப்பாளி பின்லாந்தின் இலக்கியமான கலேவெலா காவியத்தை தமிழாக்கம் செய்தவர். இந்நூலில் உதயணன் 1957 முதல் 1961வரை எழுதிய 18 சிறுகதைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. உங்கள் தீர்ப்பு என்ன (சுதந்திரன் 1959), எல்லாம் யேசுவே (வீரகேசரி 1961), தேடி வந்த கண்கள் (கல்கி 1961), அப்பாவின் ஆசை (தினகரன் 1960), முதலாம் பிள்ளை (தமிழின்பம் 1960), விமோசனம் (கலைச்செல்வி 1960), நீ தான் வேண்டும் (தமிழின்பம் 1960), ஒரு நாள் இன்பம் (சுதந்திரன் 1960), பூவரசம்பூ (சுதந்திரன் 1959), மகன் தந்தைக்காற்றும்.. (சுதந்திரன் 1959), நல்ல பொய் (அல்லி 1959), அவளால் முடியாது (தமிழோசை 1959), ஒருததிக்கு ஒருவன் (சுதந்திரன் 1959), செல்லாக்காசு (கலைச்செல்வி மலர் 1959), வாழ்ந்து கெட்டவன் (அல்லி 1959), செவ்வாய் பார்த்த பார்வை (சுதந்திரன் 1959), மிஸ்டர் கந்தசாமி (வீரகேசரி 1959), தியாகி (வீரகேசரி 1957) ஆகிய தேர்ந்த கதைகள் இதில் இடம்பிடித்திருக்கின்றன.

ஏனைய பதிவுகள்