உரும்பிராய் மு.து.செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: Scripts ஆப்செட்).
xviii, 198 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 17.5×12.5 சமீ.
இலங்கையின் வடபுலத்தில் உரும்பிராயில் பிறந்தவர் மு.துரையப்பா செல்வராஜா. 1973முதல் லண்டனில் வாழும் சிவில் பொறியியலாளரான இவர் லண்டனில் 1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்கு லண்டன் தமிழ்ப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். கவிஞரும், நாடகாசிரியருமான இவர் இலண்டனில் நாரதர் என்ற நாடகத்தொகுப்பையும் நினைவில் ஒரு நிலா, வாகை வீடு ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் மணிமேகலைப் பிரசுரங்களாக முன்னர் வெளியிட்டவர். இவரது மூன்றாவது சிறுகதைத்தொகுப்பாக வெளிவரும் இந்நூலில், உண்மை தெரியாமல் வைத்த நட்பு, தொலைபேசியில் யார்? மொட்டு, ஒரு நாள் கல்யாணம், வேண்டாத கற்பனை, கறுப்பி, கொடுமை, புதிய கௌரவம், நீ ஒரு கறுப்பன், என் வானத்து நிலா ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.