8580 ஊரடங்குச் சட்டம்: சிறுகதைத் தொகுதி.

சிட்னி மார்க்கஸ் டயஸ் (சிங்கள மூலம்), எம்.சீ.ரஸ்மின், மல்லிகாதேவி (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2008. (கனேமுல்ல: ஜயன்த்  பிரின்ட் கிராப்பிக்ஸ்).

xiii, 95 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1848-16-3.

ஆனமடுவ, தோதன்ன அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சிட்னி மாகஸ் டயஸ் பிரபல சிங்கள எழுத்தாளரும் சிறுவர் இலக்கியவாதியுமாவார். இலக்கியத்திற்கூடாகச் சமாதானப்பாலமொன்றை அமைத்து , இலங்கையர் மனதில் ஒரே நாடு-ஒரே தேசியம் என்ற சிந்தனையை வளர்ப்பதில் அக்கறைகாட்டுபவர். இவர் எழுதிய அந்திரிநீதிய என்ற சிங்களமொழிச் சிறுகதைத் தொகுப்பின் தமிழ்வடிவம் இதுவாகும். நீண்ட இரவு, இருண்ட உலகம், இரண்டாவது உபாயம், அவனது கிறிஸ்துமஸ், ஊரடங்குச் சட்டம், பறைஒலி, துனுமடலாவை தேரரின் கதை,  பிஞ்சப்புவின் அந்திமகாலம், மரணம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  226919).

ஏனைய பதிவுகள்