சுதாராஜ்.சென்னை 600 098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, ஜுன் 2010. (சென்னை 600 098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்).
xx, 704 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-81-234-1752-3.
காட்டுமிராண்டித்தனமான எஜமானியம்மாவின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவிச் சிறுவன், முதிர்கன்னிகளின் மனக் குமைச்சல்கள், சாலையோரத்துப் பெண்ணின் ஆண்தேவை, இனவெறியற்ற இலங்கையில் சகோதரர்களாக வாழ்ந்தால் என்ன என நினைக்கும் இளைஞன், வருகின்ற வரன்களையெல்லாம் கழித்துத் தள்ளிவிட்டு இளமையைத் தெலைத்தபின்னர் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் பெண், காதலி ஏமாற்றிவிட்டதால் விலைமாதிடம் சென்று உபதேசம் பெற்றுத் திரும்பும் இளைஞன் என சுதாராஜின் கதாபாத்திரங்களும் களங்களும் வித்தியாசமானவை. ஈழத்துப் படைப்பாளி சுதாராஜின் அறுபது சிறுகதைகளைக் கொண்ட பெருந்தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.