தமிழ்ப்பிரியா (இயற்பெயர்: புஷ்பராணி முத்தையா). சுன்னாகம்: சித்திவிநாயகர் நூல் நிலையம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xiv, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
காம்பு ஒடிந்த மலரைத் தொடர்ந்து, தமிழ்ப் பிரியாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். 70களின் முற்கூற்றில் இலங்கை வானொலியில் தன் சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல்களின் வாயிலாக அறிமுகமான ஏழாலையைச் சேர்ந்த தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் பின்னர் சுடர் சஞ்சிகையின் வாயிலாகத் தொடங்கி சிந்தாமணி போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் தொடர்ந்தன. ஓர் உரிமைப் போராட்டம் (சிந்தாமணி 15.7.1979), பலவீனங்கள் (ஈழநாடு 15.7.1979), மனித இதயங்கள் (சிந்தாமணி 26.8.1979), தற்பாதுகாப்பு (ஈழநாடு 25.11.1979), வழிகாட்டிகள் (சுடர்- புரட்டாதி 1981), ஒரு நியாயம் விழிக்கிறது (சிந்தாமணி 10.1.1982), ஒரு அதர்மத்தின் அத்திவாரம் (சுடர்- மாசி 1982), இதோ ஒரு அப்பா (சிந்தாமணி 14.11.1982), வாய்ச்சொல் வீரர்கள் (சுடர்- மார்கழி 1982), மௌனங்கள் சாகவேண்டும் (குங்குமம் 20.6.1982), உணர்வுகள் விழிக்கட்டும் (சுடர்- ஒக்டோபர் 1976), தனிமலர் (சுடர்- ஒக்டோபர் 1975), கல்யாண வைபோகமே (சிந்தாமணி 10.8.1980), போலி வடிவங்கள் (சிந்தாமணி 1.11.1981) ஆகிய 14 கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.