8585 ஒரு தென்னைமரம்: சிறுகதைத் தொகுப்பு.

கிண்ணியா ஏ.எம்.எம்.அலி. கிண்ணியா 5: ஹாஜரா வெளியீட்டகம், அடப்பனார் வயல், 1வது பதிப்பு, 2011. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டர்ஸ், இல.43, திருஞானசம்பந்தர் வீதி).

xvi, 204 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53265-0-6.

1974இல் சிந்தாமணியின் வாயிலாக, எஸ்.டி.சிவநாயகத்தின்  இலக்கியப் பண்ணையினூடாக உள்வாங்கப்பட்ட கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலியின்  (13.10.1948) சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. யதார்த்தமான சம்பவங்களுக்கு சுவையாக மெருகூட்டிச் சிறிது கற்பனை கலந்து படைத்துள்ளார். கிராமியச் சூழலை மையப்படுத்தும் கதைகள், சகோதரிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமையின்மை, இஸ்லாமிய தொழுமை இடங்களில் நடக்கும் ஊழல்கள் என்பன சில கதைகளின் கருக்களாகின்றன. பணமே முக்கியம் என்று வாழ்ந்த பத்மநாதன், பெண்பிள்ளையை வெறுக்கும் பெண்ணியப் பிரகிருதி போன்ற பாத்திரங்கள் இவரது சிருஷ்டிப்பில் எம்முடன் உரையாடுகின்றன. ஒரு தென்னை மரத்திற்காக இரு சகோதரிகளிடையே நடக்கும் போட்டி நூலின் தலைப்புக் கதையாகும். தென்னைமரத்தை நீதிமன்றம் மூலம் உரிமைகோரிப் பெற்ற கையோடு அது புயலில் சிக்கி வேரோடு சாய்கின்றது. நேர்மைக்கு இடமேது என்ற கதை பள்ளியில் வேலை செய்த முஅத்தீன் பிழாவின் சோகக் கதையை கூறுகிறது. இவரது கதைகளில் தூக்கலான அம்சம் கிராமியப் பழமொழிகளையும் உவமைத் தொடர்களையும் உரையாடல்களில் பரவவிட்டிருப்பதாகும். தூய தமிழ்ச்சொற்களையும் ஆங்காங்கே காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

13078 சைவசித்தாந்தம்: மறுபார்வை-அறிவாராய்ச்சியியல்.

சோ.கிருஷ்ணராஜா (மூலம்), வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv,