நீ.பி.அருளானந்தம். கல்கிசை: திருமகள் பதிப்பகம், இல.7, லில்லியன் அவென்யு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44, புகையிரத நிலைய வீதி).
175 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1055-10-3.
வடபுல தமிழ்மக்களின் வாழ்க்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தவற்றையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எம் கண்முன்னே நிறுத்தும் கதைகள் இவை. போரையும், அதன் வடுக்களையும், போர் தின்றொழித்த ஊர்களையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிற்கால வாழ்வின் அவலத்தையும் இக்கதைகள் பேசுகின்றன. பாசாங்கற்ற ஆற்றொழுக்கான தங்குதடையின்றி எழுதப்பட்ட வசனநடையில் அமைந்த கதைகள் இவருடையவை. ஓ அவனால் முடியும், திருவுளச் சீட்டு, மறுகணம் ஓட்டம், பதிவு மாறாமல், சுனாமி நினைவு (நிலைக்கும்), சாவின் வலை, சுடலைக்காணி, நாணலை நிமிர்த்த முடியவில்லை, சூரியன் வந்து சேர்ந்தான், சுமையோடு நிற்றல், மின்னுகின்ற பொன்கள் ஆகிய 11 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மானிட நேயம், வர்க்க முரண்பாடுகள், சாதியம், பெண்ணியம், காதல் என பல விடயங்களை கதைகள் தொட்டுச் செல்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226065).