சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தொண்டைமானாறு: இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, கெருடாவில் தெற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (தொண்டைமானாறு: சர்மிலன் பிரிண்டர்ஸ், கெருடாவில் தெற்கு).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13.5 சமீ.
செம்பியன்செல்வன் (கையுறை, அரசியல், தற்கொலைப்படை, பொறுக்கி, அடிக்கல், காக்கைகள், வியர்வைச் சித்திரங்கள், முதலைகள், பாசம்), காசி ஆனந்தன் (புடம், தேவை, நிறைவு, இடம், தோல்கள், இரவல், மதிப்பு), சாந்தன் (தீர்வு, முதலாளிகள் பலவிதம், கடப்பாடு, ப்ரீ வீல், புதிய மடமைகள், சோடனை), எஸ் பொ (கண், தயை), எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுமீன், காதல் மேஜை, சித்திர மீன், எழுதத் தெரிந்த புலி)ஆகியோரின் குறுங்கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அடைப்புக்குறிக்குள் அவர்களது கதைகளின் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. குறுங்கதைகளுடன் அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்.