மரியான்தம்பி ஸ்ரனிஸ்லாஸ். கண்டி: தேசிய குருமடம், மெய்யியல் பீடம், அம்பிட்டிய, 1வது பதிப்பு, தை 2005.(கண்டி: குடும்பப் பணியகம்).
x, 74 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 17.5×13 சமீ.
திருக்கோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மாத வெளியீடான வெட்டாப்பு என்னும் இதழில் அருட்திரு மரியான்தம்பி ஸ்ரனிஸ்லாஸ் அடிகளார் எழுதிய மணிக்கதைகள் இவை. இளைய சமுதாயம் சிந்தித்துச் செயற்படவேண்டும் என்றஎண்ணத்தின் வெளிப்பாடாக இந்நூலில் அடங்கியுள்ள குறுங்கதைகள் அமைகின்றன. விசுவாசமுள்ள செபம், இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை, மிதமிஞ்சிய நம்பிக்கை, இறை அனுபவம், ஓய்வுநாள், நற்செய்தி அறிவிப்பு, சமயோசிதம், தூய்மையான உள்ளம், உபத்திரவம் செய்யாதிரு என்பனபோன்ற தலைப்பகளில் இக்கதைகள் இறைபக்தியையும், கிறிஸ்தவ விழுமியங்களையும், ஒழுக்கவியலையும் அழுத்திக்கூறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 154002).