ஆரபி சிவஞானராஜா. சுன்னாகம்: ஸ்கந்தவரோதயா கல்லூரித் தமிழ் மன்றம், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, புரட்டாதி 2000. (தொண்டைமானாறு: சந்நிதியான் ஆச்சிரமம்).
(8), 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ.
இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில், சமூகத்தின் முரண்பாடுகளுக்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் எதிரான ஆவேசம், பிறரால் கைவிடப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட ஜீவன்களிடம் கருணை சொரியும் மனிதாபிமானம், விஞ்ஞானத்துறைக்கு கல்வியின் ஊடாகப் பெற்றுக்கொண்ட உளவியல்ரீதியான அணுகுமுறை, தான் காணும் உலகின் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் கூர்ந்து நோக்கும் கலைத்துவம் செறிந்த பார்வை என்பன வெளிக்காட்டப்படுகின்றன. கரை தேடும் அலைகள், அட்டைகள், மணமகன் தேவை, கணிப்பீடுகள், கானல்நீர், வெந்து தணிந்த காடுகள், மனிதம் என்றும் மரணிப்பதில்லை ஆகிய ஏழு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129789).