8599 காம்பு ஒடிந்த மலர்.

தமிழ்ப்பிரியா (இயற்பெயர்: புஷ்பராணி முத்தையா). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, 2009. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன).

xvi, 134 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×13.5 சமீ.

70களின் முற்கூற்றில் இலங்கை வானொலியில் தன் சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல்களின் வாயிலாக அறிமுகமான ஏழாலையைச் சேர்ந்த தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் பின்னர் சுடர் சஞ்சிகையின் வாயிலாகத் தொடங்கி சிந்தாமணி போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் தொடர்ந்தன. நவம்பர் 1988முதல் பிரான்சில் புலம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட  இவரது படைப்புகள் பாரிஸ் ஈழநாடு, ஐ.பீ.சீ வானொலி, T.T.N தொலைக்காட்சி என்று களம்கண்டன. மூன்று தசாப்த இடைவெளியில் இவர் எழுதியவற்றுள் 14 தேர்ந்த கதைகள் கொண்ட முதலாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். வெளிநாட்டு மாப்பிள்ளையை மணம் முடித்து, கன்னி என்ற தானத்தையும் இழந்து, மனைவி என்று வாழுகின்ற பெருமையையும் இழந்து அனலாய்த் தகிக்கின்ற இதயத்துள் தன் ஆசைகள், கனவுகள், தாபங்கள் எல்லாவற்றையும் கருக்கிவிட்டு காம்பொடிந்த மலராய் வாடுகின்ற அபலைப் பெண்ணின் கண்ணீர்க்கதை இந்நூலின் தலைப்புக்கதையாகின்றது. காம்பு ஒடிந்த மலர், சுமைகள் சுமக்கும் இதயம், பார்வைகள் கோணலாகும்போது, நெஞ்சில் நிலைக்காத உறவு, மீளாத சகதி மலர்கள், நாங்கள் பட்டிக்காடுகள், விதி எழுதாத கதை, மனிதாபிமானம் மாறுகின்றது, கருவிகள், தர்ம அதர்மங்கள், அவனும் ஒரு மனிதன், கரையைத் தொடாத அலைகள், மாற்றங்கள், நாங்கள் மனிதர்கள் ஆகிய 14 கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மீரா பதிப்பகத்தின் 81ஆவது நூல்.

ஏனைய பதிவுகள்

cryptocurrency market

Free cryptocurrency Cryptocurrency trading platform What is cryptocurrency mining Cryptocurrency market It has managed to create a global community and give birth to an entirely

Beste Verbunden Spielbank Handyrechnung Begleichen

Content Gibt Dies Irgendwelche Beschränkungen, Falls Meine wenigkeit Via Handyrechnung Hinblättern Möchte? Entsprechend Funktioniert Die Einzahlung? Erreichbar Casinos Via Handyrechnung Within Österreich Faq Genau so